என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்காசியில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
  X

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.


  தென்காசியில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார்.

  தென்காசி:

  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினுடைய சட்டச் செயலாளர் பிச்சைக்கனி மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக துணை பொது செயலாளர் முருகையா ஆகியோர் கூட்டுதலைமை தாங்கி நடத்தினர்.

  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார்.

  செந்தூர்பாண்டியன், முதுகலை ஆசிரியர்கள் சதீஷ்குமார், காளிராஜ், முப்புடாதி சங்கர், ஜேனட்பொற் செல்வி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

  ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மணிமேகலை சிறப்புரை ஆற்றி பேட்டி அளித்தார். முடிவில் கீதா கோமதி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரமேஷ், ராஜ்குமார்,சுதர்சன்,சிவகுமார்,துரைராஜ்,பசுபதி, தென்காசி ராஜ்குமார், மாதாப்பட்டணம் குத்தாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

  Next Story
  ×