சேலம் அருகே வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேர் கைது

சேலம் அருகே துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட 3 பேரையும், அவர்களை மடக்கி பிடித்த வனத்துறையினரையும் படத்தில் காணலாம்.
பிடிபட்ட 3 பேரையும், அவர்களை மடக்கி பிடித்த வனத்துறையினரையும் படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

சேலம் மாவட்ட வனப் பாதுகாவலர் பெரியசாமி உத்தரவின் பேரில் வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் குமார் தலைமையில் வன அலுவலர்கள் செந்தில் குமார், கிருஷ்ணமூர்த்தி, பன்னீர்செல்வம் ,கோபி,அருணகிரி, கோபிநாத், ராமஜெயம், டேனிஸ்பேட்டை, தங்கராஜ், ஆனந்தன் ஆகி யோர் டேனிஸ் பேட்டை, காடையாம்பட்டி வனப்பகுதி யில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்கு 3 பேர் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தி வெடிபொருட்கள் வைத்து சுற்றி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வெடிமருந்துகள் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காடையாம்பட்டி மேல் காடு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் (வயது 60) வால்காடு நவநீதன் (36),முருகன் (52) என்பது தெரியவந்தது. அவர்கள்  3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com