ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் முனைவராக உருவாக்க பயனாளிகளுக்கு பயிற்சி

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் முனைவராக உருவாக்க பயனாளிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சேலம் ஒன்றிய  குழு தலைவி  மல்லிகா வையாபுரி  தலைமையில் பயிற்சி நடந்த காட்சி.
சேலம் ஒன்றிய குழு தலைவி மல்லிகா வையாபுரி தலைமையில் பயிற்சி நடந்த காட்சி.
Published on

சேலம்:

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு   கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கிராமப்புற ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற பெண்களுக்கான 100 சதவீத மானியத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கி தொழில் முனைவராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான பயிற்சி வகுப்பு   நடைபெற்றது.

   சேலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லிகா வையாபுரி தலைமை தாங்கினார்,  திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்  ரெயின்போ நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இந்த பயிற்சியில் சேலம் உதவி இயக்குனர்  மருத்துவர் ராஜா, மருத்துவர் ரகுபதி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் கோபி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி சங்கரன், அய்யம் பெருமாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வடிவேல், சேலம் வட்டார கால்நடை உதவி மருத்துவர்கள் கலைச்செல்வி, சக்திவேல், ரேவதி, சரிதா, சொர்ணாம்பிகை, விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com