சேலம் மாவட்டத்தில் 27-வது கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில் 27-வது கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
.
.
Published on

சேலம்:

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர் ந்து நடைபெற்று வருகின்றன. 

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட 27 லட்சத்து 56 ஆயிரத்து 178 பேருக்கு முதல் தவணையும், 20, லட்சத்து 69 ஆயிரத்து 726 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட 91 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 66 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 

தற்பொழுது வாரம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 26 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 7 லட்சத்து 47 ஆயிரத்து 794 பேருக்கு முதல் தவணையும் 

9 லட்சத்து 73 ஆயிரத்து 369 பேருக்கு இரண்டாம் தவ ணையும் செலுத்தப் பட்டுள் ளன. இன்று 27-வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதற்கென ஊரகப் பகுதியில் 865 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 205 என மொத்தம் 1070 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு 18,500 - க்கு மேற்பட்ட அலு வலர்கள் மற்றும் பணியாளர் கள் பணியில் ஈடுப்படுத்தப் பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com