தூத்துக்குடியில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்- வாலிபர் கைது

புதுக்கோட்டை பஜார் பகுதியில்போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா எடுத்து செல்லப்பட்டது.
தூத்துக்குடியில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்- வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதுக்கோட்டை பஜார் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

குட்கா பறிமுதல்

அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் நடுத்தெருவை சேர்ந்த ரமேஷ் (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அதில் பெங்களூருவில் இருந்து குட்கா வாங்கி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com