

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 65). இந்நிலையில் தனது உறவினர் நாகராஜ் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நூத்தப்பூரில் இருந்து பில்லங்குளத்திற்கு சென்றுள்ளார். பில்லங்குளம் பகுதியில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.