search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
    X

    பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

    • பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    தமிழ் புத்தாண்டையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பல் மண்டல அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் மகாசித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினிமாதாஜி, தவயோகிகள் மகாலிங்க சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர் ஸ்ரீபிரம்மரிஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஈசன் அம்பாள் மற்றும் உற்சவமூர்த்திகள் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் பஞ்சமூர்த்திகள் ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீவெள்ளந்தாங்கியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணியளவில் ஈசன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதே போல் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில், எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில், செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாசலஸ்வரர் கோவில், எஸ். ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் சுவாமிகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×