அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஒருவர் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியாதல் ஒருவர் பலியானார்.அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் உருக்குலைந்த ஆண் சடலம் கிடந்தது.
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஒருவர் பலி
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதியதில், உடல் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

இதுகுறித்து ச.வாழப்பாடி வி.ஏ.ஓ. பெரியசாமி, வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் உருக்குலைந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தில் சிக்கி இறந்தவர் யார்? விபத்திற்கு காரணமான வாகனம் எது? என்பது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com