பட்டாசு ஆலையில் அதிகாரி 'திடீர்' ஆய்வு

திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தனர். வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்.
பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்.
Published on

மன்னார்குடி:

சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேர்ந்த வெடி விபத்துக்களில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி வருவாய் கோட்டாசியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அதிகாரிகள் மன்னார்குடி திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது வெடியின் தரம், ஆபத்துகால முன்னெச்சரிக்கை பணிகள்,வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். மன்னார்குடி வட்டசியர் கார்த்திகேயன் தீயனைப்பு துறை அதிகாரி சீனிவாசன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தேஷனாமூர்த்தி வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com