search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.21 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
    X

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கு வந்த மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியைகள்.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.21 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

    • தென்காசி மாவட்டத்தில் 8,285 மாணவர்கள், 9,329 மாணவிகள் என மொத்தம் 17,614 பேர் தேர்வு எழுதினர்.
    • 11-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே 10-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

    தேர்வு முடிவுகள்

    இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 818 பேர் எழுதினர். இதில் 19 ஆயிரத்து 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.21 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    மாணவிகள் அதிகம்

    மாணவர்கள் 9 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுதியதில் 8 ஆயிரத்து 564 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.62 சதவீதம் ஆகும்.

    மாணவிகள் 11 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 633 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.28 சதவீதம் ஆகும்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 9,201 மாணவர்கள், 10,739 மாணவிகள் என மொத்தம் 19,940 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 8,247 மாணவர்கள், 10,504 மாணவிகள் என மொத்தம் 18,751 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.04 சதவிகித தேர்ச்சி ஆகும்.

    மாணவர்கள் 89.63 சதவிகிதமும், மாணவிகள் 97.81 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம்

    தென்காசி மாவட்டத்தில் 8,285 மாணவர்கள், 9,329 மாணவிகள் என மொத்தம் 17,614 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,001 மாணவர்களும், 8,914 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.35 சதவீத தேர்ச்சியாகும்.

    11-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் அவர்கள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பிளஸ்-1 வகுப்புகள் தொடக்கம்

    இதற்கிடையே மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ்1 வகுப்புகள் இன்று ெதாடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். முதல் 2 நாட்கள் நல்லொழுக்க பயிற்சிகள் மட்டுமே நடைபெற உள்ளது.

    Next Story
    ×