பரமத்திவேலூர் பகுதிகளில் சிவன் கோவிலில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மாசிமாத பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
.
.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசிமாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.  

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.  பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார். 

இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பர நாதருக்கு மாசி மாத வளர்பிறை சோமவார பிரதோஷத்தினை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சந்தனகாப்பு உடன் பிறை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் ஆலயம், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் மாசிமாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெரு மானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com