நாமக்கல் மாவட்டத்தில் 22-ம் கட்ட மெகா முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 22-ம் கட்ட மெகா முகாம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
.
.
Published on

நாமக்கல்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 21 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 29 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதற்கிடையே நேற்று 22-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக 490 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த முகாம் பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. 

இதனால் முகாம் நடைபெற்ற இடங்கள் பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்பட்டன. இதனிடையே நேற்று 5 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com