பரமத்திவேலூர் பகுதிகளில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்தது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. தற்போது மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பரமத்திவேலூர் பகுதிகளில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குறும்பல மகாதேவி, சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், ஆனங்கூர், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் சுமார் 8 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்தது.

இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக் கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள், கம்மங்கூழ் விற்பனை கடைகள், கரும்பு ஜூஸ் விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் மாறி குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. தற்போது மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com