சோழவந்தானில் பள்ளி ஆண்டு விழா

சோழவந்தானில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
சோழவந்தானில் பள்ளி ஆண்டு விழா
Published on

சோழவந்தான

சோழவந்தான்-வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் நடந்தது. எம்.வி.எம் குழும சேர்மன் மணி முத்தையா முன்னிலை வகித்தார்.

பள்ளி நிர்வாகி எம்.வி. எம்.வள்ளிமயில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் செல்வம் வரவேற்றார். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகள், கராத்தே, சிலம்பம், யோகா நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com