சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட சர்வே பணி தொடக்கம்

சோழவந்தான் அருகே சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட சர்வே பணி தொடங்கப்பட்டது. சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட சர்வே பணி தொடக்கம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே வைகை ஆற்றுக்கு மேற்கு பகுதியில் செல்லும் மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மார்நாட்டான் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அடுத்து இது தொடர்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வருவாய்துறையினர் முதல் கட்ட சர்வே பணி முடித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் ஆலோசனையின் பேரில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் பிர்கா சர்வேயர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோர் சித்தாயிபுரம் கோவில், குருவித்துறை, அய்யப்பநாயக்கன்பட்டி, மன்னாடிமங்கலம் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com