வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு
Published on

மதுரை

மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 1702 பேர் வேட்பாளர்களாக போட்டி யிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக 1615 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே அந்தந்த பகுதிகளுக்கு 1940 மின்னணு  வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், 1702 வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. 

இதனை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com