search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதி மீறி இயக்கிய  694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து
    X

    விதி மீறி இயக்கிய 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து

    • விதி மீறி இயக்கிய 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    • முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்து களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கி தருமாறு உத்தர விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி கள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-

    விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி றது. கடந்த 2013ம் ஆண்டு முதல் முதல் 2017ம் ஆண்டு வரை அதிக மக்களை ஏற்றியதாக 27 ஆயிரத்து 751 ஆட்டோக்களும், மீட்டர் இல்லாமல் இயக்கி யதாக 10 ஆயிரத்து 286 ஆட்டோக்களும், சீட்டை மாற்றி அமைத்து இயக்கி யதாக 2 ஆயிரத்து 354 ஆட்டோக்கள் உள்பட பல்வேறு விதிகளை மீறியது தொடர்பாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 468 ஆட்டோக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரையில் விதி மீறியது தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதில் வழக்கு பதியப்பட்ட 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறி முதல் செய்யப்பட்டன. அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டது.

    பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்படுத்த வும் தொடர் நடவ டிக்கைகள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×