கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. தீபாரதனை காட்டப்பட்டது.
கொடியேற்றம் நடந்த பின் கொடி மரத்திற்கு தீபாரதனை காட்டப்பட்டது.
கொடியேற்றம் நடந்த பின் கொடி மரத்திற்கு தீபாரதனை காட்டப்பட்டது.
Published on

மதுரை

மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரம் பூக்களால் அலங்கரிக் கப்பட்டது. காலை 9 மணியளவில் சுவாமி-அம்மாள் கொடிமரம் முன்பு எழுந்தருள பட்டர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

அதனை தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வருகிறார். வருகிற 8-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாக னங்களில் எழுந்தருளுகிறார். வருகிற 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது.

5-ந் தேதி கோவில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 6-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்புகிறார்.

8-ந் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com