விழிப்புணர்வு முகாமில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி பேசினார்.
விழிப்புணர்வு முகாமில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி பேசினார்.

கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் ஆர்வத்தை ஏற்படுத்த டி.ஐ.ஜி. அறிவுரை

கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுரை வழங்கினார்.
Published on

மேலூர்

மதுரை&திருச்சி 4 வழிசாலையில் மேலூரில் இருந்து கொட்டாம்பட்டி செல்லும் பகுதியில் தினமும் விபத்துக்கள் ஏற்படுவதும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. 

சராசரியாக மேலூரில் இருந்து கொட்டாம்பட்டி செல்லும் இந்த பாதையில் ஏற்படும் விபத்துக்களால் ஒரு மாதத்திற்கு குறைந் தது 15 பேர் உயிர் இழக்கின்றனர். இதனை  தொடர்ந்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளான மேலூர் 4 வழிச் சாலை சந்திப்பு, சத்தியபுரம், தும்பைப்பட்டி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இங்கு விபத்து ஏற்படாமல்  தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் மேலூர் டி.எஸ்.பி. பிரபாகரன்,  இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் உடனிருந்தனர். 

அதனைத் தொடர்ந்து மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கக்கன் மணிமண்டபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில்  டி.ஐ.ஜி. பொன்னி தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.  இதில் அவர் பேசுகையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில்  அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்&1098 மற்றும் வரதட்சணை கொடுமை, பாலியல் தொந்தரவு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க வாரம்தோறும் இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

14 வயதில் பெண் பிள்ளைகள் ஓடி போய் திருமணம் செய்வதை மனம் ஏற்க மறுக்கிறது. இதனை தடுக்க சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை பெண்களுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டும்.   கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண் டும் என்றார். 

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி,  இன்ஸ்பெக்டர்கள் ரமாராணி, பொண்அருள், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,  தும்பைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்னக்கருப்பன் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com