மலைப்பாதையில் மண் சரிவு- வாகன ஓட்டிகள் அவதி

இலகுரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சென்று வருகிறது.கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பரவலாக மழை செய்து வருகிறது.
மலைப்பாதையில் மண் சரிவு- வாகன ஓட்டிகள் அவதி
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சென்று வருகிறது.

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை வழியாக மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பரவலாக மழை செய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதை சாலையின் ஓரங்களில் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

தற்போது பெய்துள்ள மழை காரணமாக சாலையின் ஒரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதையில் உள்ள சாலைகள் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டு குழிகளாக இருப்பதால் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் மிகுந்த சிரமத்தில் வர வேண்டிய நிலை உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com