என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது
  X

  சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
  • 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்தாவரை போக்சோ சட்டத்தின் கீழ் ‌ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வசந்தபுரம் அருகே உள்ள நடந்தை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தனசேகரன் (வயது 23) கூலித் தொழிலாளி. இவர் பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஊர்நல அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.

  அதைதொடர்ந்து, பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்தாக தனசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ‌ வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தனசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

  Next Story
  ×