search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் கீழக்கோட்டம் நாகேஸ்வரன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா
    X

    கும்பகோணம் கீழக்கோட்டம் நாகேஸ்வரன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா

    • கால சர்ப்ப தோஷம் என அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
    • ஆதிசேஷன் வழிபட்டு பேறு பெற்ற முதல் காலத்தில் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பாகும்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் கீழக்கோ ட்டத்தில் பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரன் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

    ஆதிசேஷன் வழிபட்ட கோவில்

    முற்காலத்தில் ஆதிசேஷன் உடல் நலிவுற்று சிவனை வணங்கிய போது அவர் மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி இக்கோவிலில் உள்ள பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரரையும், 2-ம் காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், 3-ம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், 4-ம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு சாபம் நீங்க பெற்றார் என்பது புராண வரலாறு ஆகும்.

    தோஷங்கள் நீங்கும்

    இக்கோவிலில், சித்திரை மாதத்தில் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மீது படுவது தனிச்சிறப்பாகும். இதனால் இத்தலம் 'பாஸ்கர ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் வெளிப்பிர காரத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் நாககன்னி சமேத ராகு- கேது பகவானை வழிபட்டால் ராகு தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம் என அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    முதல் காலத்தில் வழிபடுவது சிறப்பு

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சிவராத்திரி விழா நாளை இரவு நான்கு கால பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற இருக்கிறது. ஆதிசேஷன் வழிபட்டு பேறு பெற்ற முதல் காலத்தில் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பாகும்.

    4 கால பூஜைகள்

    மேலும், மகாமக கரையில் எழுந்தருளியுள்ள சேடச (16) மகாலிங்க கோவில்கள் மற்றும் ஆதிகும்பேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்ப ட்ட விஸ்வநாதர், ஏகா ம்பரேஸ்வரர், காசிவிஸ்வ நாதர், அபிமுகே ஸ்வரர், கௌ தமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், காளஹஸ்தி ஸ்வரர், மேலக்காவிரி நஞ்சுண்டே ஸ்வரர், கைலாசநாதர், பிரம்மபுரீஸ்வரர், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆகிய கோவில்களில் சிவரா த்திரியை யொட்டி நான்கு கால சிறப்பு பூஜைகளும், சில கோவில்களில் நாட்டியா ஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×