search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் விமான நிலையத்திற்கான பணிகளை தொடங்க உள்ளோம்- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
    X

    கரூரில் விமான நிலையத்திற்கான பணிகளை தொடங்க உள்ளோம்- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

    • தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
    • கரூரின் ரூ.10,000 கோடி வர்த்தகத்தை 2030ல் ரூ.30,000 கோடியாக உயர்த்தவேண்டும்.

    கரூர்:

    கரூரில் விமான நிலையத்திற்கான பணிகளை தொடங்கி உள்ளோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருவதையொட்டி தொழில் முனைவோர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது-

    தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

    அடுத்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டி ப்பாக்குவதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சொந்த உற்பத்தியாக 6,270 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். கரூரில் விமான நிலையம் இல்லாததால் ஏற்றுமதியாளர்கள் வர தயங்கும் நிலை உள்ளது. அவர்கள் வந்தால் நமது ஜவுளி நிறுவன கட்டமைப்புகள், மேலும் வர்த்தகம் உயரும். விமான நிலையம் வர அதிக வாய்ப்புள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம்.

    கரூரின் ரூ.10,000 கோடி வர்த்தகத்தை 2030ல் ரூ.30,000 கோடியாக உயர்த்தவேண்டும். கோவையில் தொழிலதிபர்களிடம் சமூக உணர்வு அதிகமாக உள்ளது. கரூரில் சற்று குறைவாக உள்ளது. அதற்காகதான் யங் இந்தியா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரூரில் உள்ளவர்களும் சமூக உணர்வை ஏற்படுத்தி க்கொள்ளவேண்டும் என்றார்.

    சிஐஐ சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும். விரைவில் முருங்கை உற்பத்திப்பொருள் தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளோம் என்றனர்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான அரசு புறம்போக்கு நிலம் கிடைக்கவில்லை. குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டும் உரிய இடம் இல்லை என்றார்.

    பின்னர் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு கரூர் திருமாநிலையூரில் முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி 1ம் தேதி வரும் முதல்வருக்கு 4 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்து விழா மேடைக்கு வரும் முதல்வருக்கு 23 இடங்களில் தலா 5,000 பேர் வீதம் 1.15 லட்சம் பேர் வரவேற்கின்றனர். முன்னதாக முதல்வர் தொழில்முனைவோர்களை சந்திக்கின்றார் என்றார்.

    Next Story
    ×