என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மது விற்ற 8 பேர் கைது
    X

    சட்ட விரோதமாக மது விற்ற 8 பேர் கைது

    32 மது பாட்டில்கள், 10 லிட்டர் கள் பறிமுதல்

    கரூர்,

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார் சின்னதாராபுரம், வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக மாரிமுத்து (வயது 53), அன்பழகன் (50), ராமலிங்கம் (50), ராஜர (45), மகாலிங்கம் (34), கள் விற்றதாக ரங்கநாதன் (60), கோவிந்தராஜ் (73), சுப்பிரமணி (60) ஆகிய, 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 32 மதுபாட்டில்கள், 10 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×