search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கருணாநிதி 101-வது பிறந்த நாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
    X

    கருணாநிதி 101-வது பிறந்த நாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

    • சுமார் 18 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
    • கலைஞரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அண்ணா அறிவாலயம், கோபாலபுரம் இல்லம், கருணாநிதியின் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். அவருடன் மு.க. தமிழரசு, அமிர்தம், செல்வி, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர், நே.சிற்றரசு மற்றும் அமைச் சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதன்பிறகு மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத் துக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார்.

    Next Story
    ×