வடசேரி விபத்தில் பெயிண்டர் பலி பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்கு

அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வடசேரி விபத்தில் பெயிண்டர் பலி பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்கு
Published on

கன்னியாகுமரி:

நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.

இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com