தென்தாமரைகுளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்தாமரைகுளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Published on

நாகர்கோவில்:

தென்தாமரைகுளம் அய்யாகோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது45) கொத்தனார். இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார்.

முருகன் கடந்த 1-ந் தேதி தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது வீட்டின் முதல் மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார் .

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் முருகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பாஞ்சாலி அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com