சிறுவாபுரி திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவம்: கொடியேற்றத்துடன் துவங்கியது

19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறுவாபுரி திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவம்: கொடியேற்றத்துடன் துவங்கியது
Published on

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com