காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை- ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கடந்த 2 தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை-  ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

கர்நாடகா மாநில அணைகளில் தண்ணீர் திறப்பு குறைவாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன்காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 6500 கன அடியாக இருந்த நீர் வரத்து படிபடியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் காவிரி ஆற்றில நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com