கனமழை எச்சரிக்கை: நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

அனைத்து படகுகளும் வருகிற 23-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். பலத்த இடி மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

நாகப்பட்டினம்:

வங்கடலில் வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு ள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க ஆழ்கடல் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று முதல் விசைப்படகு மீனவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் டோக்கன்கள் நிறுத்தப்பட்டு ள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆழ்கடல் சென்ற அனைத்து படகுகளும் வருகிற 23-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். கனமழையின் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிமாக இருக்கும்.

பலத்த இடி மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நாகூர் பட்டினச்சேரி துவங்கி கீச்சாங்குப்பம், அக்கரை ப்பேட்டை, செருதூர், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட சுமார் 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் 3500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த மீனவ கிராமத்தின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் விற்பனை செய்யும் மீன்பிடித்தளம் மற்றும் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறை முகம் ஆகிய வெறிச்சோடி காணப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com