திசையன்விளையில் போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார்.
திசையன்விளையில் போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

நெல்லை:

திசையன்விளை அருகே உள்ள இட்ட மொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் (வயது 22). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார். அதன்படி நாகலிங்கத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் இன்று நாகலிங்கம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com