search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி  ரசிகர்கள் சிறப்பு பூஜை
    X

    தூத்துக்குடியில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு பூஜை

    • பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.
    • ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள்.

    தூத்துக்குடி:

    நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி தூத்துக்குடி பாகம்பிரியாள்-சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் சிவன் கோவில் சன்னதியில் உள்ள மூலவர், சண்முகர், பிள்ளையார், நடராஜர் தளங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.

    இதேபோல் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பள்ளி வாசல் ஆகியவைகளுக்கு சென்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ஜெயபால், கண்ணன், ரமேஸ் கார்த்திகேயன், மாரிமுத்து, புதிய துறைமுகம் லெட்சுமணன், வெலிங்டன், உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×