search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் சங்கரன்கோவில் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வளர்ச்சி பணிகள்

    • சங்கரன்கோவில் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அந்த வகையில் சங்கரன்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதி 32 ஆண்டுகளாக அ.தி.மு.க. வசம் இருந்து வந்த தொகுதி ஆகும்.

    தி.மு.க. வெற்றி

    அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்ற சங்கரன்கோவில் தொகுதியில், கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா வெற்றி பெற்றார். இதனால் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. வசமானது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சங்கரன்கோவில் தொகுதியிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உத்தரவிட்டு வருகிறார்.

    பல்வேறு திட்டங்கள்

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, சட்ட மன்றத்தில் தொகுதிக்கான தேவைகளை எடுத்துக்கூறி பேசி வருகிறார். மேலும் தேவையான திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி அமைச்சர்களிடமும் தொடர்ந்து மனு அளித்து வந்த நிலையில், அமைச்சர் இதனை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் சங்கரன்கோவில் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நான்கு வழிச்சாலையாக தரம்உயர்வு

    அந்த வகையில் சங்கரன்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளில் நெடு ஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    சங்கரன்கோவில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு என்.ஜி.ஓ. காலனி ெரயில்வே கேட் முதல் திருவேங்கடம் சாலை சந்திப்பு வரை உள்ள மாநிலச் சாலையில் புறநகர் போக்குவரத்து பெருக்க த்தை கருத்தில் கொண்டு 2 வழிச்சாலையாக இருந்த சாலை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்

    மேலும் 2021-2022-ம் நிதியாண்டில் சங்கரன்கோவில் தேரோடும் தெற்கு ரத வீதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் திட்டம் தொடக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.

    மேலும் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் வரை செல்லும் மாவட்ட முகமை சாலையில், சங்கரன்கோவில் தற்காலிக பஸ் நிலையம் முதல் உமையத்தலைவன்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் இருவழிதடமாக முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டது.

    அகலப்படுத்தும் பணிகள்

    வரும் நிதியாண்டில் ராஜபாளையம் முதல் சங்கரன்கோவில் வழியாக நெல்லை செல்லும் மாநில சாலையில் திருவேங்கடம் சாலை சந்திப்பு முதல் அரசு மருத்துவமனை வரையும், சங்கரன்கோவிலில் இருந்து கழுகுமலை செல்லும் மாநில சாலையில் சங்கரன்கோவில் அக்கினி காளியம்மன் கோவில் முதல் தற்காலிக பஸ் நிலையம் வரை நகர்ப்புற மேம்பாட்டு 2022 -2023-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறையால் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்த வரை தற்போது ராஜா எம.எல்.ஏ. முயற்சியால் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகி ன்றது. இதனால் தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×