மாமல்லபுரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி

மாமல்லபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்க்க எஸ்வந்த்ராஜ் வந்திருந்தார். வேலை முடிந்ததும் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
மாமல்லபுரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி
Published on

மாமல்லபுரம்:

திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் எஸ்வந்த்ராஜ் (வயது20). வியாசர்பாடியில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நண்பர் ஆகாஷ் (20) என்பவருடன் மாமல்லபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்க்க வந்திருந்தார். வேலை முடிந்ததும் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது எதிரே வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த எஸ்வந்த்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆகாஷ் காயத்துடன் உயிர் தப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com