விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட விவசாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22-யை கடைசி தேதியான 31.12.2022-க்குள் செலுத்த வேண்டும்.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டத்தில், 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிர்க்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட விவ சாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22-யை

கடைசி தேதியான 31.12.2022-க்குள் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கங்க ளின் கடன் பெறும் விவ சாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதி மொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரீமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com