search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறை; விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை பதிவு செய்யும் விவசாயிகள்.

    அரசு கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறை; விவசாயிகள் மகிழ்ச்சி

    • மோட்டார் பம்புசெட் உள்ள பகுதிகளில் இந்த சாகுபடி நடைபெற்றது.
    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. மோட்டார் பம்புசெட் உள்ள பகுதிகளில் இந்த சாகுபடி நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கோடை நெல் சாகுபடி 70 ஆயிரம் ஏக்கர் வரை நடைபெற்றது. இதில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

    மேலும் தஞ்சாவூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×