search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசில்லா விநாயகர் சதுர்த்தி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
    X

    விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    மாசில்லா விநாயகர் சதுர்த்தி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

    • பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, திருவாரூர் மாவட்ட தேசிய பசுமை படை, பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மாசில்லா இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் தலைமையில் நடைபெற்றது.

    பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு சுற்றுச்சூழலையும், நீர் நிலைகளைகளையும் பாதுகாப்போம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரவி, வசந்த், முன்னாள் கவுன்சிலர் மெய்கண்ட வேல், ஆசிரியர் மனோன்மணி, ராஜ்குமார், சண்முகம், தொழிற்சங்க பொறுப்பாளர்கள் காளிதாஸ், ராஜப்பன், விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×