என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே ஆட்டோ கவிழ்ந்து இளம்பெண் பலி - தந்தை, டிரைவர் படுகாயம்
- கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துகாளை(வயது 55). இவரது மகள் செல்வி(25).
- நேற்று காலை முத்துகாளையும், செல்வியும் தேவர்குளத்தை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.
நெல்லை:
கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துகாளை(வயது 55). இவரது மகள் செல்வி(25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. நேற்று காலை முத்துகாளையும், செல்வியும் தேவர்குளத்தை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
பன்னீர் ஊத்து விலக்கில் இருந்து இரண்டும் சொல்லான் கிராமம் செல்லும் ரோட்டில் சென்றபோது எதிர்பா ராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
பெண் பலி
இதில் செல்வி படுகாயம் அடைந்தார். முத்துகாளை, சுப்பிரமணியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வி உள்பட 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.