பாளையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி

நெல்லையில் மாவட்ட அளவில் 3 நாள் நடக்கும் தடகள போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள்.
Published on

நெல்லை:

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நெல்லையில் மாவட்ட அளவில் 3 நாள் நடக்கும் தடகள போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

இந்த போட்டியில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்பட 79 போட்டி கள் நடத்தப்படுகிறது.

போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வரு கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் செங்கல்பட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com