மேட்டுப்பாளையத்தில் பெண் வியாபாரி மீது தாக்குதல்

பக்கத்து கடைகாரர் கைது செய்யப்பட்டார். கடையில் ஒரு கூடை தக்காளி காணாமல் போனது.
மேட்டுப்பாளையத்தில் பெண் வியாபாரி மீது தாக்குதல்
Published on

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சையது முகமது. இவரது மனைவி மெஹருதின் நிஷா (வயது 52). இவர் மேட்டுப்பாளையம் அன்னாஜிராவ் சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் முஜ்பூர்ரஹ்மான் (50). இவரும் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மெஹருதின் நிஷா கடையில் ஒரு கூடை தக்காளி காணாமல் போனது. இதுகுறித்து அவர் பக்கத்து கடையை சேர்ந்த முஜ்பூர்ரஹ்மானிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த முஜ்பூர்ரஹ்மான், மெஹருதின் நிஷாவை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை பார்த்த அவரது மகள் மற்றும் பேரன் அங்கு வந்து அவரை சமாதானம் செய்தனர்.

அப்போது மேலும் ஆதிதரம் அடைந்த அவர் அங்கிருந்த இருப்பு கம்பியை எடுத்து மெஹருதின் நிஷாவை தாக்கினார். இதனை பார்த்த முஜ்பூர்ரஹ்மானின் தம்பிகள் ரபிதீன் (40), பரூக் (45) மற்றும் உறவினர் ஆசிக் (25) ஆகியோரும் அங்கு வந்து அவர்களை மிரட்டினர்.

இதுகுறித்து மெஹருதின் நிஷா மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முஜ்பூர்ரஹ்மான், ரபிதீன், பரூக், ஆசிக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முஜ்பூர்ரஹ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே மெஹருநிஷா மகன் முகமதுஷரிப் (19) என்பவர் தனது உறவினர்கள் பாரிஷா (40) மற்றும் பரிதா (37) ஆகியோருடன் சென்று முஜ்பூர் ரஹ்மானின் கடையை அடித்து நொறுக்கி உள்ளார். இதுகுறித்து முஜ்பூர்ரஹ்மானின் மகள் கொடுத்த புகாரின் பேரில் முகமதுஷரிப், பாரிஷா, பரிதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com