search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபாடு
    X

    நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபாடு

    • ஜெயங்கொண்டம் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்றது
    • பச்சரிசி, சர்க்கரை கலந்து படையலிட்டனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பூவத்தி கொல்லை, வடுவலூர் உள்ளிட்ட கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபாடு செய்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையை முன்னிட்டு பஞ்சாங்க முறைப்படி திசைகள் குறிக்கப்பட்டு நல்லேர் பூட்டி வழிபாடு செய்தனர்.முன்பு உள்ள கால கட்டங்களில் வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அவைகளை குளிப்பாட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, மாலை அணிவித்து நிலங்களில் நிறுத்தி வழிபாடு செய்து விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டும் என வேண்டுதல்கள் வைத்து வழிபாடு செய்து நல்லேர் பூட்டுவது வழக்கம்.தற்போது ஏர் உழும் காளைகள் வளர்ப்பு குறைந்த காரணத்தினால் விவசாயத்திற்கு பெரிது பயன்படுத்தப்படும் மண்வெட்டி, டிராக்டரை வரிசையாக நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்காரம் செய்தனர். இதில் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சரிசி, எள், சக்கரை கலந்து படையலிட்டனர்.

    பின்னர் மண்வெட்டியால் நிலத்தை கொத்தியும், டிராக்டர் மூலம் நிலங்களை உழுதும் வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×