கொள்ளிடம் ஆற்றில் 2 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

கொள்ளிடம் ஆற்றில் 2 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குளித்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு தட்டுப்பட்டது
கொள்ளிடம் ஆற்றில் 2 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காலில் கடினமான ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த இளைஞர்கள் நீருக்குள் மூழ்கி காலில் தட்டுப்பட்டதை வெளியே எடுத்துள்ளனர்.

அப்போது அது சாமி சிலை என்பது தெரிய வந்தது.இதனால் மீண்டும் நீருக்குள் மூழ்கி இளைஞர்கள் வேறு ஏதேனும் சாமி சிலை உள்ளதா என்று அலசியபோது, மேலும் ஒரு சாமி சிலை கிடைத்துள்ளது. நீரில் இருந்து வெளியில் கொண்டு வந்து பார்த்த போது சுமார் 3 அடி உயரம் கொண்ட தட்சணாமூர்த்தி, 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலைகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வருவாய் துறையினருக்கு இளைஞர்களும், அப்பகுதி பொதுமக்களும் தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com