செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

செங்கோட்டை:

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com