காரைக்கால் நெடுங்காட்டில் பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது

பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்.தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம்.
காரைக்கால் நெடுங்காட்டில்  பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது
Published on

புதுச்சேரி:

திருவாரூர் மாவட்டம் வேலங்குடியை சேர்ந்தவர் ஹேமாவதி (வயது 38). இவரது கணவர் சிவராஜா. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  ஹேமாவதியின் தந்தை பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் வசித்து வருகிறார். தனது தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹேமாவதி சைக்கிளில் தனது தந்தையை பார்க்க சென்றார்.

அப்போது, மர்மநபர் ஒருவர், மோட்டார் சைக்களில் சென்று, ஹேமாவதியிடம் ஆபசமாக பேசி மோட்டார் சைக்களில் ஏறுமாறு கூறிய தாக தெரிகிறது. இது குறித்து, ஹேமாவதி நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹேமாவதி கூறிய மர்ம நபரின் அடையாளங்களை வைத்து திருவாரூர் மாவட்டம் பாவட்ட குடியைச்சேர்ந்த ரமேஷ் (39) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com