search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ஆபத்தான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் - பா.ஜ.க. கோரிக்கை
    X

    ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் ஆபத்தான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் - பா.ஜ.க. கோரிக்கை

    • சமீபத்தில் மழை பெய்யும் போது அந்த பகுதியில் மின் கசிவுகள் ஏற்பட்டு ஷாக் அடித்துள்ளது.
    • ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு ஆபத்தான மின்மாற்றியை மாற்றி புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா பொதுச்செ யலாளர் உமரி சத்தியசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே எம்.சவேரியார்புரம் கணேஷ்நகரில் திருச்செந்தூர் பிரதான சாலையோரமாக உள்ள மின்மாற்றி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. டன் கணக்கில் மின் சாதனங்களை தாங்கி நிற்கும் இந்த மின்மாற்றி தூண்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு சிமெண்ட் ஸ்லாப் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது.

    சமீபத்தில் மழை பெய்யும் போது அந்த பகுதியில் மின் கசிவுகள் ஏற்பட்டு ஷாக் அடித்துள்ளது. காற்று பலமாக வீசும் போது மரக்கிளை போல ஆடி சத்தம் எழுப்புகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு ஆபத்தான மின்மாற்றியை மாற்றி புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பழுதான மின்மாற்றி அகற்றாமல் விட்டு வைத்ததால் அவை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது.

    இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது 2 நாட்களாக நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மின்வாரிய துறையினர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பழுதான மின்மாற்றியை சீரமைத்து மின்சாரம் வழங்கினர். அதே போன்ற நிலை இந்த பகுதியிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×