தனியார் நிறுவனத்தில் ரூ.6 லட்சம் மோசடி; காசாளர் கைது

கிருஷ்ணகுமார் தந்தையுடன் இணைந்து சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தனியார் நிறுவனத்தில் ரூ.6 லட்சம் மோசடி; காசாளர் கைது
Published on

கோவை,

கோவை பீளமேடு தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவர் அந்த பகுதியில் தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் இணைந்து சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார்.

இங்கு சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் சேரன்கோடு பகுதியை சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர் காசாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நிறுவன வங்கி கணக்கில் இருந்து ரூ.6,05,000 பணத்தை சுரேந்தர் தனது வங்கி கணக்கிற்கு வரவு வைத்து மோசடி செய்தார்.

இந்த விவரம் நிறுவனத்தில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கையில், தெரியவந்தது. இது குறித்து நிறுவன உரிமையாளர் கிருஷ்ணகுமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுரேந்தரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com