

அம்பத்தூர்:
அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து கைப்பிடி மண் எடுக்கப்போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து இருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மாநில செயலாளர் வினோஜ்செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாகட்சியினர் தடையை மீறி கைப்பிடி மண் எடுப்பதற்காக வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.