திருத்துறைப்பூண்டியில், புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

75 கிலோ புகையிலை ெபாருட்கள் கடத்திவந்தது தெரியவந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டியில், புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து . திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் 75 கிலோ புகையிலை ெபாருட்கள் கடத்திவந்தது தெரியவந்தது. பின்னர் வாகனங்களில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த முகமது அப்துல் ஹாதர் (வயது63), அவரது மகன் சையது இப்ராஹிம் (37), அகமுடையார் தெருவை சேர்ந்த சரவணன் (39) ஆகியோர் என்பதும், புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்த 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com