தமிழகத்தில் இன்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா- சென்னையில் 1,066- பேருக்கு பாதிப்பு

இன்று 1,542 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,616- ஆக உள்ளது.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 85 ஆயிரத்து 429- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,542 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 30,545 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 1,066 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,616- ஆக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com