அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை

மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுசூதனன்
மதுசூதனன்
Published on

சென்னை:

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த தின தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரது உடல்நிலை சீரடையவில்லை.

தற்போது மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலம் கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com